எரிபொருள் விநியோகத்தில் முறைகேடு(Photo)
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் சிபட்கோ எரிபொருள் நிலையத்துக்கு 6300 லீட்டர் எரிபொருள் மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இன்று(16) வழங்கப்பட்டுள்ளது.
இதில் கந்தளாய் தள வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டள்ளது.
பொது மக்களுக்கு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கேள்வி எழுப்பிய பொதுமக்களுக்கு தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் அவர்களுடன் முறைகேடாக நடந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் விநியோகம்
சுகாதார ஊழியர்களுக்கு தனியாக எரிபொருள் வழங்கப்படும் அதேவேளை, ஐ.ஒ.சியிலும் எரிபொருள் வழங்கப்படுகின்றது என மக்கள் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
சுகாதார ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிளுக்கு மூவாயிரம் ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிக்கு ஆராயிரம் ரூபாவுக்கும், கார்களுக்கு இருபதாயிரம் ரூபாவுக்கும் எரிபொருள் வழங்கப்படுகின்றது.
முறைகேடு
இதேவேளை,சுகாதார ஊழியர்கள் பலர் கேன்களில் எரிபொருள் எடுத்து சென்றதையும் காணக்கூடியதாகவுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊடகவியலாளர்களுக்கும்,கர்ப்பிணி பெண்களுக்கும் எரிபொருள் வழங்க சுகாதார
அதிகாரிகள் மருத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



