எரிபொருள் கொள்வனவு செய்ய புதிய நடைமுறை: பதிவு செய்யும் முறை தொடர்பில் முக்கிய அறிவித்தல்
புதிய இணைப்பு
இன்று எரிபொருள் நெருக்கடிக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைமுறை தீர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
"மக்கள் இப்போது எரிபொருளினை பெற்றுகொள்ள பின்வரும் இணையத்தளம் மூலம் பதிவு செய்யலாம் எனவும், இந் நடவடிக்கை எப்போது செயல்படுத்தப்படும் என்பது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பதிவு செய்வதற்கு:- http://fuelpass.gov.lk/
முதலாம் இணைப்பு 11.11 |
இன்று (16) வரவிருந்த முதல் தொகுதி டீசல் நாட்டுக்கு கிடைத்துள்ள நிலையில், பெறப்பட்ட டீசல் கையிருப்பின் தரம் தற்போது சரிபார்க்கப்படுகிறது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், எரிபொருள் விநியோகஸ்தர்கள் இருவரும் இன்று தேசிய எரிபொருள் உரிமத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Introduction to the National Fuel Pass will be held @ 12.30pm. A guaranteed weekly fuel quota will be allocated. 1 Vehicle per 1 NIC, QR code allocated once Vehicle Chassis number & details verified. 2 days of the week according to Last Digit of number plate for fueling with QR. https://t.co/hLMI9Nm5ZF
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 16, 2022
டீசல் இருப்பு இன்று அதிகாலை கொழும்பு வந்ததாகவும், தற்போது தர மாதிரிகள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்றைய தினமே இரண்டாவது தொகுதி டீசல் வரும் என்றும், அதுவும் இந்த நடைமுறைப்படி சரிபார்க்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 18-19 திகதிகளில் முதல் தொகுதி பெட்ரோல் நாட்டிற்கு வர உள்ளது. அத்துடன், மூன்று கப்பல்களுக்கும் தேவையான கொடுப்பனவுகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய எரிபொருள் உரிமம்
இதேவேளை இன்று எரிபொருள் நெருக்கடிக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைமுறை தீர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது தேசிய எரிபொருள் உரிமம் என்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இன்று (16) மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தேசிய அடையாள அட்டை, வாகன உரிம எண், வாகன எண் (Vehicle Chassis number) மற்றும் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட QR குறியீடும் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.
QR குறியீடு மற்றும் வாகன இலக்க தகட்டின் இறுதி இரு இலக்கங்கள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு கிழமையில் இரு நாட்கள் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது,
You My Like This Video