எரிபொருள் விடயத்தில் பொது நிருவாக, உள்நாட்டு அமைச்சு தலையிடாது - பிரியந்த மாயாதுன்னெ
அத்தியாவசிய சேவைகள் மற்றும் வேறு வேலைகளுக்காக எரிபொருளை வழங்குவதற்கு பொது நிருவாக, உள்நாட்டு அமைச்சு தலையிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிபொருளை வழங்குமாறு இவ்வமைச்சிடம் கோரிக்கையிட வேண்டாம் எனவும் சகல அமைச்சின் செயலாளர்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் இன்று பொது நிருவாக, உள்நாட்டு அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இதேவேளை, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கிடைக்கப்பெறும் எரிபொருளை பகிர்ந்தளித்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள், மாவட்டத்தின் நிறுவனத் தலைவர்களுடன் வேலைப்படிமுறையொண்டு மேற்கொள்ளப்பட்டிருந்தும் எரிபொருள் உறுதியளித்தவாறு கிடைக்கப்பெறாமையால் அவர்களும், பிரதேச செயலாளர்களும் நாளாந்தம் பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
எரிபொருள் விண்ணப்பங்கள் தொடர்பில் ஆலோசனை
எனவே மாவட்ட ரீதியாக கிடைக்கப்பெறும் கோரிக்கைகளுக்கு அமைய குறித்த எரிபொருள் விண்ணப்பங்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்புமாறும் மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தங்களது விண்ணப்பங்களையும், மின்சக்தி எரிசக்தி செயலாளர்களுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.எரிபொருள் பிரச்சினை பொதுப் பிரச்சினை என குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேடமாக நெல் அறுவடைக்காக உறுதியளித்தவாறு எண்ணெய் வழங்குதல் முன்னுரிமையானது என்பதோடு அது உணவுப் பாதுகாப்புக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் விடயம் என்பதை மறத்தல் கூடாது.வட மாகாணத்தின் மீன்பிடித் தொழிலுக்காக மண்ணெண்ணெய் வழங்குமாறும் தொடர்ந்தும் கோரப்படுகின்றது.
தயவுடன் இது தொடர்பாக அவதானம் செலுத்தி எரிபொருள் பகிர்ந்தளித்தலுக்காக பொது
பொறிமுறை ஒன்றைத் தயாரிக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் என பொது நிருவாக, உள்நாட்டு அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னெ விடுத்துள்ள
அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam
