மன்னார் நகர சபையினால் நிர்மாணிக்கப்பட்ட கடைகளை வழங்கியதில் முறைகேடு
மன்னார் நகர சபையினால் சைனா பஜார் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 49 கடைகளை வழங்கியதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, குறித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 49 கடைகள் பெறுகை நடைமுறை இன்றி முறைகேடாக வழங்கப்பட்ட ஊழல் செயற்பாட்டினால் ஏற்பட்ட நட்டத்தை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வடமாகாண ஆளுநரின் செயலாளர் சி. சத்தியசீலன் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கு எழுத்து மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
விசாரணை
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் நகரசபையினால் "சைனா பசார்" பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 49 கடைகள் பெறுகை நடை முறையின்றி முறை கேடாக வழங்கப்பட்ட ஊழல் செயற்பாட்டினால் ஏற்பட்ட ரூபா 2 கோடி 91 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ( 2 9,160,000.00 ) நட்டத்தை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வடமாகாண ஆளுநரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் நகரசபைக்கு ஏற்பட்ட வருமான இழப்பு காரணமாக முன்னாள் தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்கள் மீது விசாரணை மேற்கொண்டு 1939 ஆம் ஆண்டு 61ஆம் இலக்க நகர சபைக் கட்டளைச்சட்டத்தின் பிரிவு 182(1) அமைய நடவடிக்கை எடுக்க கணக்காய்வு அதிபதிக்கு பாரப்படுத்துவதற்கு தங்களால் வழங்கப்பட்ட சிபார்சினை ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam