நாட்டில் பெய்துவரும் கடும் மழை! திறக்கப்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று (24) திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை முதல் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால், நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான் கதவு
தொடர்ந்தும் கடும் மழை பெய்யும் பட்சத்தில், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாகத் திறக்கப்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால், நீர்த்தேக்க அணைக்கட்டுக்கு கீழ்புறத்தில் கொத்மலை ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
நான் ஈழத் தமிழ் பெண்..! சமூகவலைத்தளங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள மைத்ரேயி ராமகிருஷ்ணனின் ஒற்றைவார்த்தை
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri