மேற்குக்கரை இஸ்ரேலிய குடியேற்றப் பொருட்களுக்கு தடை விதிக்க அயர்லாந்து திட்டம்
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக்கரை பகுதிகளில் உள்ள சட்டவிரோத குடியேற்றங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, வரும் ஜூலை மாத நடுப்பகுதிக்குள் தடை விதிக்கும் புதிய சட்டத்தை இயற்ற அயர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில வணிக அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அயர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெலன் மெக்என்டி தெரிவித்துள்ளார்.
காசா மீதான இஸ்ரேலின் போர்
அமைதியான தீர்வை நோக்கியே அயர்லாந்து தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், ஆனால் இஸ்ரேல் அரசின் தற்போதைய நடவடிக்கைகள், குறிப்பாக மேற்குக்கரையில் அதிகரித்து வரும் குடியேற்றவாசிகளின் வன்முறை மற்றும் லெபனானில் தொடரும் தாக்குதல்கள் ஆகியவை, இஸ்ரேலுக்கு அமைதியில் உடன்பாடில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

காசா மீதான இஸ்ரேலின் போரைத் தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வரும் அயர்லாந்து அரசு, இந்த குடியேற்றங்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக முதன்முதலில் 2024 அக்டோபரிலேயே வாக்குறுதி அளித்திருந்தது.
எனினும், இந்தத் தடையை 'சேவைகள்' சார்ந்த வர்த்தகத்திற்கும் நீடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியதாலும், மறுபுறம் இந்த மசோதாவை முற்றிலும் இரத்து செய்ய சர்வதேச நிறுவனங்களின் வர்த்தக பிரதிநிதிகள் அழுத்தம் கொடுத்ததாலும் இந்த சட்டம் இயற்றப்படுவது தாமதமாகி வந்தது.

தற்போது இந்தத் தடை வெறும் 'பொருட்களுக்கு' மட்டுமே என மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் போன்ற ஒரு சில பொருட்கள் மட்டுமே பாதிக்கப்படும் என்றும், இதன் ஆண்டு வர்த்தக மதிப்பு சுமார் 2,00,000 யூரோக்கள் ($234,660) மட்டுமே என்றும் கூறப்படுகிறது.
சேவைகள் துறைக்கும் இந்தத் தடையை விரிவுபடுத்தினால், அது அயர்லாந்தில் செயல்படும் பல பன்னாட்டு நிறுவனங்களைச் சிக்கலில் ஆழ்த்தும் என்று வணிக அமைப்புகள் எச்சரித்ததைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 13 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam