அதிரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த RCB
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூர் அணி தகுதி பெற்றுள்ளது.
தரம்சாலாவில் நடைபெற்ற முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
தோல்வியைத் தழுவியது
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலெஞ்சர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் ரோயல் செலெஞ்சர்ஸ் அணியின் சார்பில் ரஜட் பட்டிதார், 33 பந்துகளில் 93 ஓட்டங்களை அதிரடியாகப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் ககிசோ ரபாடா மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
255 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.
இந்தநிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் முதலாவது அணியாக ரோயல் செலெஞ்சர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 14 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam