இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்த அயர்லாந்து முனைப்பு
ஐசிசி மகளிர் Emerging Nations Trophy கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி செம்பியன் பட்டத்தை வெல்லும் நம்பிக்கையுடன் அயர்லாந்து அணி களமிறங்கவுள்ளது.
இன்று(25.11.2026) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு, அரை இறுதியில் நெதர்லாந்து அணியை 44 ஓட்டங்களால் வீழ்த்திய அயர்லாந்து தகுதி பெற்றது.
தொடரில் இதுவரை தோல்வியடையாத இலங்கை
அந்தப் போட்டியில் லாரா மரிட்ஸ் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும், காரா முரே 17 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ள அயர்லாந்து அணியின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக அதன் அணித்தலைவி கெபி லூயிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தொடரில் இதுவரை தோல்வியடையாத இலங்கை அணியை எதிர்கொள்ள அயர்லாந்து தயாராகி வருகிறது.
அயர்லாந்து அணிக்காக காரா முரே இதுவரை 15 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரின் அதிக விக்கெட்டுகளைப் பெற்ற வீராங்கனைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.