இலங்கை கடற்பரப்பின் அருகில் உள்ள ஈரானியக் கப்பல்கள்! அமெரிக்க அழுத்தம் குறித்து அரச தரப்பு விளக்கம்

Vijitha Herath Iran NPP Government
By Aanadhi Oct 05, 2026 05:41 AM GMT
Report

இலங்கையின் கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் அமெரிக்காவிடம் இருந்து எந்தவொரு அழுத்தமும் பிரயோகிக்கப்ப்டவில்லை என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் நாட்டின் இறையாண்மை மற்றும் அடையாளத்தைப் பாதுகாத்தே இலங்கை அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கின்றது என்றும், எந்தவொரு மனிதாபிமானத் தேவையின் போதும் பொருத்தமான முறையில் தலையிட அரசாங்கம் தயார் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் கடற்பரப்பிற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் வெளியாகும் தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உண்மைக்கு புறம்பான செய்தி

ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாகக் கப்பல் போக்குவரத்து சிக்கலாகியுள்ளது. அதன் காரணமாக இலங்கையைத் தவிர மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடற்பரப்புகளிலும் இவ்வாறு கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கை கடற்பரப்பின் அருகில் உள்ள ஈரானியக் கப்பல்கள்! அமெரிக்க அழுத்தம் குறித்து அரச தரப்பு விளக்கம் | Iranian Ships Near Srilanka Vijitha Herath Us

இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அவை அண்மையில் வந்தவை அல்ல . நீண்டகாலமாகவே குறித்த சர்வதேசக் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளன.

அந்தக் கப்பல்களில் 19 ஈரானியக் கப்பல்கள் அடங்குகின்ற போதிலும், அவை இலங்கையின் கடற்பரப்பிற்குள் நிறுத்தப்படவில்லை. மேலும், குறித்த கப்பல்களுக்கு உணவு அல்லது நீரை வழங்குவதைத் தடுக்குமாறு அமெரிக்கா இலங்கைக்கு அறிவித்துள்ளதாகப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

இலங்கை அரசாங்கத்திற்கு அவ்வாறான எந்தவொரு அழுத்தமோ, தலையீடோ அல்லது அறிவிப்போ அமெரிக்காவினால் விடுக்கப்படவில்லை.

புவிசார் அரசியல் முக்கியத்துவம்

எமது இறையாண்மை மற்றும் அடையாளத்தைப் பாதுகாத்தே நாங்கள் அனைத்துத் தீர்மானங்களையும் எடுக்கின்றோம். எனினும், மனிதநேயக் காரணங்களால் எமக்குத் தேவை ஏற்படும் பட்சத்தில் தேவையான தலையீட்டை நாங்களும் செய்வோம்.

இலங்கை கடற்பரப்பின் அருகில் உள்ள ஈரானியக் கப்பல்கள்! அமெரிக்க அழுத்தம் குறித்து அரச தரப்பு விளக்கம் | Iranian Ships Near Srilanka Vijitha Herath Us

அத்துடன் 'IRIS Bushehr' கப்பல் இன்னமும் திருகோணமலைத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அதிலுள்ள 13 கடற்படையினருக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பை வழங்கி அந்தக் கப்பலைப் பாதுகாப்பாகப் பராமரிக்க இலங்கை நடவடிக்கை எடுத்து வருகின்றது.

எனினும், அமெரிக்காவினால் தடைகள் விதிக்கப்பட்டுள்ள கப்பல்களுக்குப் பொருட்களைக் கொண்டு செல்வதையோ அல்லது விநியோகங்களை வழங்குவதையோ இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

இலங்கை எப்போதும் சர்வதேசக் கடல்சார் சட்டத்திற்கு அமையவே செயற்படுகின்றது. இலங்கை அமைந்துள்ள புவிசார் அரசியல் முக்கியத்துவம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சொந்தமான பெருமளவிலான கப்பல்கள் தினமும் தீவிற்கு அருகில் பயணிப்பதால், ஒரு நாடாக இலங்கை தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அக்கப்பல்களுக்கு ஆதரவையும் வழிகாட்டலையும் வழங்கக் கடமைப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.  

ரணிலின் சூழ்ச்சிக்குள் சிக்கியுள்ள மகிந்த குடும்பம் : பரிதாப நிலையில் ராஜபக்சர்கள்

ரணிலின் சூழ்ச்சிக்குள் சிக்கியுள்ள மகிந்த குடும்பம் : பரிதாப நிலையில் ராஜபக்சர்கள்

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுகள் தொடர்பில் அமெரிக்க அறிக்கையிலுள்ள அதிர்ச்சி தகவல்கள்..

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுகள் தொடர்பில் அமெரிக்க அறிக்கையிலுள்ள அதிர்ச்சி தகவல்கள்..

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US