இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள்.. அரசாங்கம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தகவல்
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் இராணுவ மோதலுக்கு மத்தியில், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நேற்று (08) இத்தகவலை வெளியிட்டார்.
இக்கப்பல்கள் இலங்கையின் பிராந்திய கடல் எல்லைக்கு 24 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.
இலங்கைக்கு அருகில்..
இவற்றில் ஈரானிய கப்பல்கள் மட்டுமின்றி பிற நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் அடங்கியுள்ளன என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், அவை வணிக மற்றும் சரக்குக் கப்பல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதுவரை எந்தவொரு கப்பலும் இலங்கையிடம் வசதிகளையோ அல்லது உதவிகளையோ கோரவில்லை என்றும், இலங்கை தரப்பிலிருந்து அவற்றுக்கு எந்தவித வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இருப்பினும், கடற்படை தற்போது நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர், இவ்விவகாரம் தொடர்பாக அரசாங்கத்தின் தலையீடு எதுவும் இல்லை என்றும் உறுதியளித்தார்.
ஆபத்தான நபரை விடுவிக்க 500 கோடி ரூபா பேரம்! மகிந்தவின் நெருங்கிய நண்பருடன் டீல் - சிக்கப்போகும் அரசியல்வாதிகள்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24