ராஜபக்சர்களை காப்பாற்ற துடிக்கும் ரணில்! நல்லாட்சி அரசாங்கத்தில் ராஜபக்சர்களுடன் நடந்துள்ள டீல்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதினை தொடர்ந்து நாட்டில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது. பல முக்கிய தகவல்களும் கடந்த காலங்களில் இடம்பெற்ற திரைமறைவு அரசியல் நகரவுகளும் அம்பலமாகின்றன.
அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும், அவர்களைப் பாதுகாப்பதாகவும் தற்போது கருத்துக்கள் வெளியாகின்றன. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதற்கு ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவு ஒரு காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில்,அனுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மக்கள் கூட்டத்திற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரப்பூர்வமாக வாழ்த்துத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது.
நாமல் ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் என்று கூறி, ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய 22 மில்லியன் அமெரிக்க டொலர் ஹொங்காங் வங்கி கணக்கு விவகாரத்தை, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்கஅம்பலப்டுத்தியுள்ளார்
. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2015ஆம் ஆண்டில் இந்த ஹாங்காங் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அப்போதைய அரசாங்கத்தில் இருந்த சிலர் தலையிட்டு அந்த நடவடிக்கைகளைத் தடுத்ததாக ஆசு மாரசிங்க பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் தகவல்கள் மூலம், முன்னாள் ஆட்சியாளர்களுக்கும் அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் 'டீலிங்' (Deal) குறித்த விடயங்களை ஆசு மாரசிங்க வெளிப்படுத்தியுள்ளார் .
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..
பெரும் தாக்குதல் வரப்போகிறது...ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு முன்னரே நெதன்யாகுவுக்கு நேரடியாக தகவல் வழங்கிய UAE ஜனாதிபதி
மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய விடுதலைப் புலிகள்! போரின் இறுதிக்கட்டம் குறித்து மனம் திறந்த சவேந்திர சில்வா