ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரானியப் புரட்சிகரக் காவல் படை தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதியில் ஈரானால் "சட்டவிரோத பாதை" என அறிவிக்கப்பட்ட கடல் வழியைப் பயன்படுத்த முயன்ற 'என்.வி சன்சைன்' என்ற பாரிய எல்.பி.ஜி எரிவாயு சுமந்து சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகரக் காவல் படை தெரிவித்துள்ளது.
வியட்நாமின் 'நட் வியட்' நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலால், அதன் எஞ்சின் அறை மற்றும் உந்துவிசை அமைப்பில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தநிலையில்,மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடல்சார் போக்குவரத்தில் பதற்றத்தை அதிகரிக்க அமெரிக்க இராணுவமே காரணம் என ஈரானியப் புரட்சிகரக் காவல் படை குற்றம் சாட்டியுள்ளது.
பொருளாதாரத் தடை
கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீட்டு நிறுவனங்களைத் தவறாக வழிநடத்தி, அமெரிக்கா இவ்வாறான சம்பவங்களை ஊக்குவிப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

தங்கள் அனுமதியின்றி சட்டவிரோத கடல் பாதைகளைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீது ஹோர்முஸ் நீரிணையில் மட்டுமன்றி, பிராந்தியம் முழுவதிலும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விதிகளை மீறும் நிறுவனங்களின் கப்பல்கள் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளும் தண்டனை நடவடிக்கைகளும் பாயும் என்றும் ஈரானிய புரட்சிகரக் காவல் படை எச்சரித்துள்ளது.
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri