மருதமுனை கடற்கரையில் 66 வயதுடையவரின் சடலம் மீட்பு - பொலிஸார் தீவிர விசாரணை
அம்பாறை - மருதமுனை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(09.10.2026) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவருக்கு 66 வயது இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
69 வயதுடையவரின் சடலம்
குறித்த நபர் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.40 மணியளவில் பாண்டிருப்பு - 02 விஷ்ணு கோவிலுக்கு அருகாமையிலுள்ள கடற்கரைப் பகுதிக்குக் குளிப்பதற்காகச் சென்றுள்ளார்.
இதன்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் பலனாக, சுமார் மாலை 5.20 மணியளவில் மருதமுனை கடற்கரைப் பகுதியில் அவரது சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது.
குறித்த நபர் அதிகளவு குடிபோதையிலேயே கடலில் குளிப்பதற்காகச் சென்றுள்ளதாகவும், அதனாலேயே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பெரியநீலாவணைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல் - சிஹான் பாரூக்
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan