இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி - குவிக்கப்படும் இராணுவத்தினர்
ஈரான் - இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம் என்ற பரபரப்புக்கு மத்தியில், ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் பூரண பாதுகாப்பை ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்களிடம் கையளிப்பதற்காக அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி பாதுகாப்பு
ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தின் போது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு மிக நெருக்கமான பாதுகாப்பை வழங்கவுள்ளது.

அத்துடன், ஏனைய பாதுகாப்பு ஏற்பாடுகளை இராணுவ கமாண்டோ படை உட்பட முப்படையினரும் வழங்கவுள்ளனர்.
ஈரான் ஜனாதிபதி மத்தள விமான நிலையத்தை வந்தடைந்ததும் பிரமுகர் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறும். அதன் பின்னர் உமா ஓயாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார். கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார்.
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரதானிகளுக்கு இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 18 மணி நேரம் முன்
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri