பாகிஸ்தான் சென்றடைந்தார் ஈரான் ஜனாதிபதி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பிறகு, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் முதன் முறையாகத் தனது வெளிநாட்டுப் பயணமாகப் பாகிஸ்தான் சென்றடைந்துள்ளார்.
இஸ்லாமாபாத் அருகிலுள்ள இராணுவ விமான நிலையத்திற்கு இன்று( 23.6.2026) வந்திறங்கிய அவரை, பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி, பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் துணைப் பிரதமர் இஷாக் தார் ஆகியோர் நேரில் வரவேற்றனர்.
இந்த ஒரு நாள் அரசுமுறைப் பயணத்தின் போது இரு நாட்டுத் தலைவர்களும் வர்த்தகம், எரிசக்தி, எல்லைப் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கவுள்ளனர்.
பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தத்தை எட்டுவதற்காக நடைபெற்ற முக்கிய முதற்கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் கத்தாரின் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையின் ஒப்பந்தப்படி, முடக்கப்பட்ட ஈரானின் 12 பில்லியன் டொலர் நிதியை அமெரிக்கா விடுவிக்கவுள்ளது.

மேலும், வரும் ஆகஸ்ட் 21 வரை ஈரான் தனது எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில் சர்வதேச தடைகளை அமெரிக்கா தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அடித்தளமாக அமைந்த 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்' பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மத்தியஸ்தராகக் கையெழுத்திட்டிருந்ததால், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் ஜனாதிபதி பெசெஷ்கியானின் இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam