இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடன் சிறீதரன் சந்திப்பு (Video)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும், இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பு நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவற்றை குறைப்பதற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பொறிமுறை தொடர்பிலும், உரப்பிரச்சினை தொடர்பிலும் உரமின்மை காரணமாக கடந்த போக செய்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் நடராஜா, சம்மேளனத்தின் செயலாளரும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சிவமோகன் பெரிய பரந்தன் வட்டார அமைப்பாளர் யதீஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.











மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
