பூமிக்கு அடியில் ஏவுகணை தளம்! அமெரிக்காவுக்கு ஈரான் மறைமுக எச்சரிக்கை
அமெரிக்காவுடனான இருதரப்பு நகர்வுகளை வலுப்படுத்த இஸ்ரேலிய பிரதமர், டொனால்ட் ட்ரம்பை சந்திக்கவுள்ள நிலையில் இரான் சர்வதேசத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விதமான காணொளியொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த இரு தரப்பு சந்திப்பானது தமது நாட்டுக்கு அச்சுறுத்தலாக மாறும் என கருதியே, அதனை எதிர்க்கும் முகாமாக இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளதாக அமெரிக்க தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையே தற்போது ஈரான், பூமிக்கடியில் சுரங்கம் அமைத்து உருவாக்கி உள்ள ஏவுகணை நகர் தொடர்பான தகவல்களை காணொளியாக வெளியிட்டுள்ளது.
🚨⚠️#BREAKING🚨🚨 Let's take you to Iran's Underground Military Base 🇮🇷#EXCLUSIVE video by IRGC of their Underground Cruze Missile Base pic.twitter.com/Irr59t1gRi
— ▒░⡷⠂𝙹𝚄𝚂𝚃𝙸𝙲𝙴 𝙵𝙾𝚁 𝚂𝙸𝙽𝚂⠐⢾░▒ (@JudgementSins) February 4, 2025
இஸ்ரேல் - ஈரான்
அமெரிக்கா முன்னதாக பகையாளியாக உள்ள நிலையில் இஸ்ரேலும், ஈரானுக்கு எதிரியாக தற்போது மாறி உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்திக்க உள்ளார்.
இதன்போது, காசா - இஸ்ரேல் போர் உள்பட மத்திய கிழக்கு பிராந்திய விவகாரங்கள் பற்றி இருதலைவர்களும் விவாதிக்க உள்ளதாக கருதப்படுகிறது. இந்த விடயம் ஈரானுக்கு பெரும் அச்சுருத்தலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படை வலிமை
இதனால் தற்போது ஈரான் தங்களின் படை வலிமைகளை தொடர்ந்து காணொளியாக வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் ஈரான் தற்போது வெளியான காணொளி அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமின்றி ஈரானுடன் மோதி வரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அச்சத்தை உருவாக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |