ஹமாஸ் தலைவரை படுகொலை செய்தவர்களை பழிதீர்க்க காத்திருக்கும் ஈரான்
ஹமாஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேலை பழிதீர்ப்போம் என ஈரான் தலைவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் இயக்க தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) கொல்லப்பட்ட நிலையில் இதற்கு எதிராக பதிலடி கொடுப்போம் என அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுந்துள்ள குற்றச்சாட்டு
இது தொடர்பில், ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி (Ayatollah Ali Khamenei) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளாவது , ''இஸ்மாயில் ஹனியே எங்கள் அன்பிற்குரிய விருந்தாளியாக இருந்தார். தெஹ்ரானில் அவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தனக்கென ஒரு கடுமையான தண்டனையை தயார் செய்து கொண்டுள்ளது.
இஸ்ரேலை பழிவாங்குவது ஈரானின் கடமை என்று நாங்கள் கருதுகிறோம்'' என குறிப்பிட்டுள்ளார்.
ஹனியேயை கொலை செய்தது யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகாத நிலையில், இஸ்ரேல் தான் இந்த படுகொலையை செய்ததாக ஈரான், துருக்கி, கத்தார் போன்ற நாடுகளும் இஸ்ரேலை குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
