எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
புதிய இணைப்பு
மாதாந்த எரிபொருள் விலைத்திருத்தத்திற்கு அமைய, எரிபொருள் விலை மாற்றமின்றி தொடரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஜூலை மாதத்தில் நிலவிய அதே விலையில், ஒகஸ்ட் மாதமும் எரிபொருள் விற்பனை செய்யப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் எமது ஊடகப்பிரிவு இலங்கை பெட்ரோலி கூட்டுதாபனத்திடம் உயர் அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு கேட்ட போது, விலை திறுத்தம் தொடர்பில் இது வரையில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளின் உண்மைத்தன்மை தொடர்பில் இன்று நள்ளிரவுக்குள் உறுதிப்படுத்தப்படும் எனவும் கூறினார்.
முதலாம் இணைப்பு
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலைகள் திருத்தப்படாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாத காரணத்தினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
விலை திருத்தம்
இந்நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தியதன் காரணமாகவே விலை திருத்தம் தொடர்பில் மேற்படி தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சந்தையில், ஜூலை 1 ஆம் திகதி வரை 82.38 டொலராக பதிவு செய்யப்பட்ட W.T.I. கச்சா எண்ளை நேற்று 75.30 டொலராக குறைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |