அமெரிக்க கிரீன் கார்ட் வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
அமெரிக்க (America) ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நெருங்கி வருவதால், கிரீன் கார்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் குடியுரிமையை உறுதி செய்து, தங்கள் வாக்குகளை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருக்கும் இந்தியர்களும் மூன்று வாரங்களில் குடியுரிமை பெறலாம் என்று ஆசிய அமெரிக்க பசிபிக் தீவுவாசிகள் தலைவர் சேகர் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் (Joe Biden) நிர்வாகத்தின் கீழ், தகுதியான கிரீன் கார்ட் வைத்திருப்பவர்கள் குடியுரிமை பெறுவது எளிது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஈரான் தலைநகரிலும், லெபனான் தலைநகரிலும் இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்கள்! இரண்டு அமைப்புக்களின் தலைவர்கள் படுகொலை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெரும்பான்மையான இந்தியர்களின் வாக்குகள் முக்கியமானதாக இருக்கும்.
தற்போது சுமார் 10 இலட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டுக்காக காத்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் வைத்தியர்கள், பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் போன்ற திறமையான மக்கள் உள்ளனர்.
எனவே, அவர்களின் வாக்குகளை பெறுவதன் நோக்கில் இந்த கிரீன் கார்ட் மூலம் தங்கள் குடியுரிமையை உறுதி செய்து கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |