தாக்குதலுக்கு உள்ளான அணுசக்தி தளங்கள் மீதான சோதனை தொடர்பில் ஈரானின் முடிவு
தாக்குதலுக்குள்ளான அணுசக்தி தளங்கள் மற்றும் அங்குள்ள பொருட்களை ஐ.நா ஆய்வாளர்கள் பரிசோதிப்பது, அமெரிக்காவுடனான "இறுதி உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் மட்டுமே ஆராயப்பட்டு தீர்க்கப்படும்" என ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கரீபாபாடி தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அனைத்து பொருளாதாரத் தடைகளையும் நீக்குவதில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் எடுக்கும் நடைமுறை நடவடிக்கைகளைப் பொறுத்தே, ஐ.நா ஆய்வாளர்களுக்கான அனுமதி அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கை
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் குரோசி கோரிக்கை விடுத்த போதிலும், ஈரானிய அதிகாரிகள் யாரும் அவரைச் சந்திக்கவில்லை என்றும் கரீபாபாடி தனது சமூக வலைத்தளப் பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்னதாக, ஈரானிய அணுசக்தி தளங்களில் சோதனைகள் நிச்சயமாக நடக்கும் என்று குறிப்பிட்டிருந்த ரஃபேல் குரோசி, "இது இன்று நடக்குமா, நாளை மறுதினம் நடக்குமா, அல்லது ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் நடக்குமா என்பது முக்கியம்தான், ஆனால் அது அவசியமான ஒன்றல்ல; இந்த ஆய்வு நிச்சயம் நடந்தே தீரும்" என்று கூறியிருந்தார்.