ஈரானிய தலைமைகளால் அவமானப்படும் அமெரிக்க தேசம் - பொதுவெளியில் விமர்சித்த ஜேர்மனி ஜனாதிபதி
ஈரானுடனான போரிலிருந்து வெளியேறுவதற்கு அமெரிக்காவிடம் முறையான உத்திகள் எதுவும் இல்லை என்றும், ஈரானியத் தலைமையால் ஒட்டுமொத்த அமெரிக்க தேசமும் அவமானப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜெர்மனி ஜனாதிபதி பிரெடெரிக் மெர்ஸ் வெளியிட்டுள்ளார்.
வடக்கு ரைன் - வெஸ்ட்பாலியாவில் உள்ள மார்ஸ்பெர்க் நகரில் மாணவர்களிடையே உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பு
ஈரானியர்கள் மிகவும் திறமையாகப் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், அவர்கள் நினைத்ததை விட மிகவும் வலிமையானவர்களாக இருப்பதாகவும் அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமெரிக்காவின் தற்போதைய நிலைப்பாடு சர்வதேச அளவில் அதன் செல்வாக்கிற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஈரானின் இராஜதந்திர நகர்வுகள் அமெரிக்காவைத் திணறடித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடான ஜேர்மனியின் இந்த வெளிப்படையான விமர்சனம் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து, பாகிஸ்தானின் மத்தியஸ்தம் மூலம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், ஈரானின் பிடிவாதமான நிலைப்பாடு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முரண்பட்ட அறிக்கைகள் காரணமாகப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
திறைசேரியின் டொலர் கையாடல் குறித்து நாடாளுமன்றில் விவாதிக்க அரசு மறுப்பு!- எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி