யாழில் 9 கடற்றொழிலாளர்கள் கைது - கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் சட்ட விரோதமான முறையில் உழவியந்திரம் பயன்படுத்தி கரைவலை தொழில் செய்த ஒன்பது கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒன்பது கடற்றொழிலாளர்கள் கைது
வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், வெற்றிலைக்கேணி பகுதியில் சட்ட விரோதமான முறையில் உழவியந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்த ஒன்பது கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு உழவியந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள், உழவியந்திரம் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்களுடன் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக யாழ். நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

