ஈரான் மீது அமெரிக்காவின் மிக நுணுக்கமான உளவியல் தாக்குதல்.. ட்ரம்ப் கையிலெடுத்துள்ள கடுமையான ஆயுதம்!
ஈரானின் நிதிப் பின்னணியை முற்றிலும் முடக்கும் வகையில் அமெரிக்கா அதன் வரலாற்றிலேயே மிகக் கடுமையான "Economic D-Day" பொருளாதாரத் தடைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க கருவூலத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஈரானுடன் எண்ணெய் வணிகம், வங்கிப் பரிவர்த்தனை, டிஜிட்டல் சொத்துக்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் தொடர்பில் இருக்கும் எந்தவொரு நாடோ அல்லது நிறுவனமோ அமெரிக்க நிதி அமைப்பிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு நிதி ஆதாரமாக இருக்கும் அனைத்து பொருளாதாரப் பாதைகளையும் முடக்குவதே இதன் நோக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், இதற்குப் பதிலடியாகத் தானும் அமெரிக்கா மீது நிதி ரீதியான தாக்குதலை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரானும் எச்சரித்துள்ளது.
ஈரான் - அமெரிக்க போர் பதற்றத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம், அமெரிக்கா கையாளும் இந்த மிக நுணுக்கமான யுக்தி சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மிக ஆழமாக ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
நேபாளத்தை மூழ்கடித்த வெள்ளம் : உயிரிழப்பு 332ஆக அதிகரிப்பு - இரண்டாவது வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு