மிக இரகசியமான ஆயுதக்கிடங்கை காட்சிப்படுத்தி அதிரடி காட்டும் ஈரான்... Strait of Hormuz வழியான கப்பல்களுக்கு இலக்கு!
ஈரான், தனது புதிய கடற்படை ஆயுத திறனை வெளிப்படுத்தும் வகையில், பூமிக்கடியில் அமைந்துள்ளதாக கூறப்படும் “மிசைல் நகரம்” (Missile City) என்ற இரகசியத் தளத்தின் காட்சிகளை வெளியிட்டுள்ளது.
ஈரானிய இராணுவம் வெளியிட்ட தகவலின்படி, தற்கொலை தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான கடல் ட்ரோன் படைகள் தற்போது Strait of Hormuz வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்நாட்டு அரச தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகளில், நீண்ட சுரங்கப்பாதைகளில் கடல் ட்ரோன்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் கடல் வெடிகுண்டுகள் வரிசையாக குவிக்கப்பட்டிருப்பது காணப்படுகிறது. சில ஆயுதங்கள் சோதனைக்காக ஏவப்படும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
Hormuz வழி செல்லும் கப்பல்கள்..
அந்த காட்சிகள் எப்போது பதிவு செய்யப்பட்டவை என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் மேலும் அந்த தளம் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதலுக்குள்ளானதா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Iran published footage of underground tunnels stocked with naval drones, anti-ship missiles, and sea mines. Reuters reported, citing US officials, that Iran has mined the Strait of Hormuz with dozens of sea mines. #Iran pic.twitter.com/Kcwp5UqkXq
— NOELREPORTS 🇪🇺 🇺🇦 (@NOELreports) March 11, 2026
ஒரு புகைப்படத்தில், ஈரானின் உயர்மட்ட தலைவர் அலி கமெனியின் புகைப்படத்துக்குக் கீழே ட்ரெய்லரில் பொருத்தப்பட்ட கடற்படை ட்ரோன் சுரங்கப்பாதையில் நிறுத்தப்பட்டிருப்பது காணப்படுகிறது.
எண்ணெய் கப்பல்களுக்கு தாக்குதல் கடல் ட்ரோன்கள் (Unmanned Surface Vehicles – USVs) எனப்படும் இந்த சிறிய படகுகள் அண்மையில் பெர்ஷியன் நீரிணை பகுதியில் இரண்டு எண்ணெய் கப்பல்களுக்கு தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ட்ரோன்கள் தண்ணீரின் மேற்பரப்பில் அல்லது அதற்கு கீழே பயணம் செய்து வெடிபொருட்களுடன் இலக்கை மோதி வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை.
மார்ச் 1 ஆம் திகதி, MKD VYOM எண்ணெய் தாங்கி என்ற கச்சா எண்ணெய் கப்பல் ஓமான் கடற்கரையிலிருந்து சுமார் 44 கடல் மைல் தொலைவில் தாக்கப்பட்டது.
வெளியான காணொளி
இந்த தாக்குதலில் கப்பலின் இயந்திர அறையில் வெடிப்பு மற்றும் தீ ஏற்பட்டதாக பிரித்தானிய Maritime Trade Operations தெரிவித்துள்ளது. சம்பவத்தில் ஒரு கப்பல் பணியாளர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கு சில நாட்கள் பின்னர், Sonangol Namibe oil tanker என்ற மற்றொரு கப்பல் Khor al Zubair Port அருகே நங்கூரமிட்டிருந்தபோது தாக்கப்பட்டது. கப்பலில் இருந்த 23 பணியாளர்களும் பாதுகாப்பாக இருந்ததாக அதன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Strait of Hormuz, உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றாகும். உலகளவில் விநியோகிக்கப்படும் எண்ணெயில் சுமார் ஐந்தில் ஒரு பகுதி இந்த நீரிணை வழியாக கடந்து செல்கிறது.
இந்த பாதையை முடக்க முடியும் என ஈரான் முன்பு எச்சரித்திருந்தது. அதேவேளை, கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தால் உலக எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 200 அமெரிக்க டொலரை எட்டக்கூடும் எனவும் ஈரான் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam