வளைகுடாவை நடுங்க வைத்த தாக்குதல்.. ஈரானின் 90 வீத வருமானத்தை கேள்விக்குறியாக்கிய ட்ரம்ப்
அமெரிக்கா, ஈரானின் மிக மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமாகக் கருதப்படும் கார்க் (Kharg) தீவில் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஈரானின் மகுடமான கார்க் (Kharg) தீவு முழுவதுமாக தாக்கப்பட்டுள்ளது என ட்ரம்ப் அறிவித்துள்ளதுடன் காணொளியையும் வெளியிட்டுள்ளார்.
இது உண்மையில், மத்திய கிழக்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச நிபுணர்கள் பரபரப்பு தவலை வெளியிட்டுள்ளனர்.
ஈரானிய மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதமான ஏற்றுமதி கார்க் (Kharg) தீவில் இருந்து தான் முன்னெடுக்கப்படுகின்றது.
ஈரானுக்கு பேரிழப்பு
இந்நிலையில், “மத்திய கிழக்கு வரலாற்றில் மிக சக்திவாய்ந்த குண்டுவீச்சு நடவடிக்கைகளில் ஒன்றை அமெரிக்க மத்திய கட்டளை மேற்கொண்டது.
ஈரானின் ‘மகுட நகை’ எனக் கருதப்படும் கார்க் தீவில் உள்ள அனைத்து இராணுவ இலக்குகளும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன” என்று ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை, குறித்த தீவில் உள்ள எண்ணெய் அடிக்கட்டமைப்புகளை அழிக்காமல் விட தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், Strait of Hormuz வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக செல்லும் நிலைக்கு ஈரான் அல்லது வேறு யாராவது இடையூறு அளிக்க முயன்றால், எண்ணெய் கட்டமைப்புகளையும் தாக்குவது குறித்து தனது முடிவை மீண்டும் பரிசீலிப்பதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மேலும், ஈரான் உடனடியாக ஆயுதங்களை கைவிட்டு “நாட்டில் மீதமுள்ளதை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
கார்க் தீவு ஏன் முக்கியம்..
கார்க் தீவானது, ஈரானின் வடக்கு பெர்ஷியக் வளைகுடாவில் அமைந்துள்ள சிறிய ஆனால் மிகவும் முக்கியமான தீவாகும். இது ஈரானின் கடற்கரையிலிருந்து சுமார் 22 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.

ஈரானின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதம் இந்த தீவின் வழியாகவே நடைபெறுகிறது. பெரிய எண்ணெய் கப்பல்கள் இங்கு எண்ணெயை ஏற்றி பெரிசியன் நீரிணை மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாக உலக சந்தைகளுக்கு அனுப்புகின்றன.
குறிப்பாக சீனா ஈரானின் எண்ணெயை அதிகமாக வாங்கும் நாடுகளில் ஒன்றாகும். இந்த தீவுக்கான அணுகல் தடைசெய்யப்பட்டால், அது ஈரானின் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க படைகள் அனுப்பப்படுகின்றனவா..
அமெரிக்க ஊடக தகவல்களின் படி, குறைந்தது 2,000 கடற்படை வீரர்களை ஏற்றிச் செல்லும் அம்பிபியஸ் கப்பல்கள் பெர்ஷியக் வளைகுடா பகுதிக்கு அனுப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், கார்க் தீவை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஊகங்கள் அதிகரித்துள்ளன. இருப்பினும் இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
அதேநேரம், 24 மணி நேரத்திற்கு முன் ட்ரம்ப், கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு “அது தற்போது முக்கிய பட்டியலில் இல்லை. பல விடயங்களில் அது ஒன்றுதான். நான் சில விநாடிகளில் என் முடிவை மாற்றக்கூடும்” என்று கூறியிருந்தார்.
இதற்கு பின்னரே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது ஈரானிய பொருளாதாரத்திற்கு வரலாறு காணாத சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அதனை தொடர்ந்து, ஈரானிய புரட்சிகர காவற்படை இந்த தாக்குதல்களுக்கு மிக கடுமையான பதிலடி கொடுப்போம் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 21 மணி நேரம் முன்
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri