ட்ரம்பை கொல்ல முயன்ற ஈரான்! சதிதிட்டத்தை முறியடித்ததாக அமெரிக்கா பெருமிதம்
ஈரான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயன்றது என்று அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் ஹெக்செத் தெரிவித்தார்.
இன்று, பென்டகனில் உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும், "ஈரான் ஜனாதிபதி ட்ரம்பைக் கொல்ல முயன்றது, ட்ரம்பைக் கொல்ல முயன்ற ஈரானிய படைகளின் தலைவரை அமெரிக்கா வேட்டையாடி கொன்றது” என தெரிவித்தார்.
2ஆம் உலகப் போருக்கு பின்னர் மிக மோசமான முதல் தாக்குதல் இலங்கைக்கு அருகில்..! அமெரிக்கா வெளியிட்ட பரபரப்பு காணொளி
IRGC உடன் கூட்டு முயற்சி
2024ஆம் ஆண்டில், ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அவரைக் கொல்ல ஈரானிய பிரிவு ஒன்றுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் ஒரு ஆப்கானிய நாட்டவருக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

அப்போது 51 வயதான ஃபர்ஹாத் ஷாகேரி என்பவர், ட்ரம்பைக் கொல்ல ஒரு திட்டத்தை வழங்கும் பணியில் ஈடுபட்டதாக நீதித்துறை குற்றம் சாட்டியது.
அப்போது ஷாகேரி ஈரானில் இருப்பதாக நம்பப்படுவதாக அமெரிக்க அரசாங்கம் கூறியது.
மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு குற்றவியல் முறைப்பாட்டில், ஈரானின் புரட்சிகர காவல்படையின் அதிகாரி ஒருவர், ட்ரம்பை கண்காணித்து கொல்ல ஒரு திட்டத்தை வகுக்க ஷாகேரியை செப்டெம்பரில் வழிநடத்தியதாக அமெரிக்க சட்டத்தரணிகள் தெரிவித்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam