இலங்கைக்கு அருகில் நடந்த ஈரானிய போர்க்கப்பல் தாக்குதல் - 80 பேர் பலி என தகவல்

Sri Lanka Navy Iran Middle East Ship
By Sajithra Mar 04, 2026 02:08 PM GMT
Report

புதிய இணைப்பு

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கையில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரிஸ் தேனா போர்க்கப்பலில் இருந்து 32 பணியாளர்களை மீட்டுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், மேலும் 148 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கைக்கு அருகில் நடந்த ஈரானிய போர்க்கப்பல் தாக்குதல் - 80 பேர் பலி என தகவல் | Sri Lanka Navy Corrects Statement Iran Ship

இரண்டாம் இணைப்பு  

கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திக சம்பத், இலங்கைக்கு அருகில் மூழ்கிய ஈரானிய கப்பலின் பணியாளர்கள் என சந்தேகிக்கப்படும் பல உடல்கள் கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், "எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, விபத்து நடந்த இடத்திற்குச் சென்ற போது, ​​ஒரு பெரிய எண்ணெய் படலத்தை மட்டுமே நாங்கள் கண்டோம். எனவே, கப்பல் மூழ்கிவிட்டதாக நாங்கள் அறிவிக்க முடியும்.

இருப்பினும், இலங்கை இதுவரை கப்பலில் இருந்து 32 பேரை மீட்டு காலியில் உள்ள கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதித்துள்ளது. அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்ற பின்னரே கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க முடியும்."

இலங்கைக்கு அருகில் நடந்த ஈரானிய போர்க்கப்பல் தாக்குதல் - 80 பேர் பலி என தகவல் | Sri Lanka Navy Corrects Statement Iran Ship

"கடலில் மிதக்கும் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட உடல்கள் கப்பல் பணியாளர்களின் உடல்களாக இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.

நாங்கள் முதன்மையாக விபத்துக்குள்ளான கப்பலில் பயணித்தவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதைப் பார்க்கிறோம். அப்போதுதான் இது எப்படி நடந்தது என்பது குறித்த விசாரணை மற்றும் தொழில்நுட்ப அறிக்கையைப் பெற முடியும்.

மற்றவர்கள் உயிருடன் இருந்தால் அவர்களை மீட்பதே எங்கள் முக்கிய கவனம். இந்தக் கப்பலில் எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்பது தொடர்பில் எதிர்காலத்தில் அறியத்தருவோம்.” என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்! கராபிட்டிய வைத்தியசாலைக்கு அவசரமாக விரைந்த அதிகாரிகள்

இலங்கையில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்! கராபிட்டிய வைத்தியசாலைக்கு அவசரமாக விரைந்த அதிகாரிகள்

முதலாம் இணைப்பு 

இலங்கை கடற்பரப்பில், ஈரான் கப்பல் மீதான நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் குறித்த முந்தைய அறிக்கையில் சில திருத்தங்கள் இருப்பதாக இலங்கை கடற்படை சற்று முன்னர் தெரிவித்துள்ளது. 

இலங்கைக்கு அருகில் நடந்த ஈரானிய போர்க்கப்பல் தாக்குதல் - 80 பேர் பலி என தகவல் | Sri Lanka Navy Corrects Statement Iran Ship

இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மீதான நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலுக்குப் பிறகு குறைந்தது 101 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை கடற்படை கூறியதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், முன்னர் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் சரியானவை அல்ல என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திக சம்பத் தற்போது தெரிவித்துள்ளார்.

அதன்படி, சம்பவத்தில் காயமடைந்த 32 பேர் கடற்படையால் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

இலங்கைக்கு அருகில் நடந்த ஈரானிய போர்க்கப்பல் தாக்குதல் - 80 பேர் பலி என தகவல் | Sri Lanka Navy Corrects Statement Iran Ship

தகவல் அறிந்து குறித்த பகுதிக்கு நாங்கள் சென்றிருந்த போது, கப்பல் மூழ்கியிருந்ததாகவும் அதன்போது நீரிற்குள் தேடலில் ஈடுபட தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார். 

இதன்போதே நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மக்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாக என குறிப்பிட்டுள்ளார். 

அதேநேரம், குறித்த பகுதியில் இருந்து 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் சில சடலங்களும் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இருப்பினும், மீட்கப்பட்ட சடலங்கள், ஈரானிய போர்க்கப்பலில் பயணித்தவர்களாக இருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை இன்னும் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஈரான் மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்ட ஒரு நாடு..! கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்

ஈரான் மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்ட ஒரு நாடு..! கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்

இலங்கைக்கு அருகில் விபத்திற்கு உள்ளான ஈரானிய கப்பல் - தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்

இலங்கைக்கு அருகில் விபத்திற்கு உள்ளான ஈரானிய கப்பல் - தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US