அமெரிக்கத் தளங்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும்...! எச்சரிக்கும் ஈரான்
அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் மத்திய கிழக்கிலுள்ள பிராந்திய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இன்று(23.03.2026) காலை ஈரானிய அரசு தொலைக்காட்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணையைத் திறக்க விதித்திருந்த காலக்கெடு முடிவடையும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்குள்
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையால் (IRGC) வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அரபு நாடுகள் மீதான தனது தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கான தெஹ்ரானின் சமீபத்திய முயற்சியாகக் கருதப்படுகிறது.

ஈரானியத் தாக்குதல்களால் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 18 மணி நேரம் முன்
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam