அடுத்த 36 முதல் 72 மணிநேரத்திற்குள் பேச்சுவார்த்தைகள் - ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
ஈரானுடனான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமைக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த 36 முதல் 72 மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தைகள் சாத்தியமாகலாம் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தங்களுக்குத் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மிகப் பாரிய 34 கப்பல்களை இரவோடு இரவாக கடத்திய ஈரான்.. ஹோர்முஸ் முற்றுகையில் ட்ரம்பிற்கு காத்திருந்த ஏமாற்றம்!
ஈரான் அரசாங்கத்திற்கு கூடுதல் அவகாசம்
இது குறித்து ட்ரம்பிடமும் வினவப்பட்டுள்ளது. அதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒரு குறுஞ்செய்தி (Text message) மூலம், அது சாத்தியமே எனப் பதிலளித்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு ஒருங்கிணைந்த முன்மொழிவை உருவாக்குவதற்கு ஈரான் அரசாங்கத்திற்கு கூடுதல் அவகாசம் வழங்கும் வகையில், இன்றுடன் முடிவடையவிருந்த போர் நிறுத்தத்தை நீடிப்பதாக ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam