புதிய கட்டத்தை எட்டும் ஹோர்முஸ் நீரிணை! ஈரானின் அதிரடி தீர்மானம்
ஹோர்முஸ் நீரிணை நிர்வாகம், (Strait of Hormuz) ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த போரில் ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு இழப்பிற்கும் ஈடுசெய்யும் வழிகளை தேடுவதுடன், போரில் காயமடைந்தவர்களுக்கான நஷ்டஈட்டையும் ஆட்சியமைப்பு கோரும்.
ஈரானின் கோரிக்கை
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) நிர்வாகத்தை ஆட்சியமைப்பு, ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

ஈரான் ஆதரவு போராட்டக்காரர்களை வீதிக்கு வருமாறு அது அழைப்பு விடுத்துள்ளது, ஏனெனில் பொது சதுக்கங்களில் எழுப்பப்படும் உங்கள் குரல்கள் பேச்சுவார்த்தைகளின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஈரான் ஒருபோதும் போரை விரும்பியதில்லை, நாங்கள் போரை நாடவில்லை, ஆனால் எந்த வகையிலும் எங்களது நியாயமான உரிமைகளை கோருவதிலிருந்து பின்வாங்க மாட்டோம்.
ஈரானின் கூட்டாளிகள் மற்றும் பிராந்திய பதிலாளிகளான (proxies) ஒட்டுமொத்த எதிர்ப்பு முன்னணியும் உள்ளடங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam