அடுத்தடுத்து கேட்கும் வெடிக்கும் சத்தம்: போரை நிறுத்த விரும்பவில்லை; நாம் விரும்புவது இதுவே - ஈரான் அதிரடி
போரை முழுமையாக முடிப்பதற்கான முன்மொழிவுகளை கேட்டு பரிசீலிக்கத் ஈரான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனமொன்றிடம் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான தலையீடு
அவர் மேலும் தெரிவிக்கையில், போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய எந்தவொரு தலையீட்டையும் ஈரான் ஏற்றுக் கொள்ளும்.
அத்தகைய முன்மொழிவுகளைக் கேட்டுப் பரிசீலிக்கத் எமது நாடு தயாராக உள்ளது.
இருப்பினும், சில நாடுகள் இந்த மோதலுக்குத் தீர்வு காண முயன்றாலும், அமெரிக்கா தனது ஆக்கிரமிப்புக் கொள்கையை நிறுத்தத் தயாராக இல்லை.

நிரந்தர முடிவு
ஈரான் வெறும் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை, மாறாக போருக்கு ஒரு நிரந்தர முடிவையே விரும்புகிறது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஈரானின் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலானது அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் மற்றும் ஏனைய அணுசக்தி பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களையும் அர்ப்பணிப்புகளையும் மீறும் செயலாகும் என ஈரான் அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.