ஈரானின் Natanz தளத்தில் மீண்டும் தாக்குதல்.. தொடர்ந்து வைக்கப்படும் இலக்கு
ஈரானின் நடான்ஸ் அணுசக்தி (Natanz) தளம் மீண்டும் விமானத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் நான்காவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், குறித்த தாக்குதலில் கதிர்வீச்சுக் கசிவு எதுவும் ஏற்படவில்லை என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் முக்கிய செறிவூட்டல் தளமான நடான்ஸ், போரின் முதல் வாரத்தில் தாக்கப்பட்டதாகவும், செயற்கைக்கோள் படங்களின்படி பல கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
எரிபொருள் நெருக்கடி: அடுத்த ஒரு வாரத்திற்குள் இலங்கையில் முடங்கவுள்ள முக்கிய துறை - விடுக்கப்பட்டது எச்சரிக்கை
முக்கிய அணுசக்தி தளம்
அந்த முந்தைய தாக்குதலால் "எந்தவொரு கதிரியக்க விளைவும்" எதிர்பார்க்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு கூறியிருந்தது.

தெஹ்ரானுக்கு தென்கிழக்கே சுமார் 220 கிலோமீட்டர் (135 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள குறித்த அணுசக்தி நிலையம், ஜூன் 2025இல் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடந்த 12 நாள் போரின்போது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களாலும், அமெரிக்காவாலும் குறிவைக்கப்பட்டிருந்தது.
மத்திய கிழக்கில் தனது இராணுவ நடவடிக்கைகளைக் குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் கூறிய ஒரு நாள் கழித்து இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
அதேவேளையில், அமெரிக்கா மேலும் மூன்று நீர்நிலத் தாக்குதல் கப்பல்களையும், சுமார் 2,500 கூடுதல் கடற்படை வீரர்களையும் அப்பகுதிக்கு அனுப்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இந்த தாக்குதல், அணு ஆயுத பரவல் தடுப்பு (NPT) உட்பட அணுசக்தி பாதுகாப்பு விதிகளை மீறியது என்று கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதி அமைச்சரின் அநாகரிகச் சைகை..! பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என அஜித் பி. பெரேரா வலியுறுத்தல்