அமெரிக்காவிற்கு பாகிஸ்தானில் ஈரான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றடைந்துள்ளார்.
இந்த பயணம் இருதரப்பு உறவுகளை குறித்து ஆலோசனை செய்ய மட்டுமே என விளக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா இதை வாய்ப்பாக பார்க்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க குழுவின் இந்த திடீர் பயணம் ஈரானில் புது விவாதத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்ட 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை அமெரிக்காவின் கடற்படை முடக்கத்தை நீக்காத காரணத்தால் நிறுத்தப்பட்டது.
ஈரானின் கருத்துகளை பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு தெரிவிக்கப்படும் என்பதும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அராக்சி தனது ட்விட்டர் பதிவில், "இஸ்லாமாபாத், மஸ்கட் மற்றும் மாஸ்கோவுக்கு சரியான நேரத்தில் பயணம் மேற்கொள்கிறேன். கூட்டணி நாடுகளுடன் இருதரப்பு விவகாரங்கள் மற்றும் பிராந்திய வளர்ச்சிகள் தொடர்பானது எனது பயணத்தின் நோக்கம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கழுகுப்பார்வை நிகழ்ச்சி...
பாகிஸ்தானியப் போர் விமானங்களின் கர்ஜனைக்கு மத்தியில் தரையிறங்கிய அப்பாஸ் அராக்சி! நள்ளிரவில் நடந்த அவசர பேச்சுவார்த்தை