அமெரிக்காவின் அமைதித் திட்டத்திற்கு ஈரான் பதில்: பாகிஸ்தான் வழியாகத் தகவல் பரிமாற்றம்
அமெரிக்கா முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கான தனது அதிகாரப்பூர்வ பதிலை ஈரான் வழங்கியுள்ளதாக அந்த நாட்டின் அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய மோதல் சூழலில் இரு நாடுகளுக்கும் இடையே சமரச முயற்சியில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானிடம் இந்த பதில் அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாகத் தொடரும் இந்த போர் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா சில நிபந்தனைகள் மற்றும் திட்டங்களை முன்வைத்திருந்த நிலையில், ஈரான் அதன் மீது தற்போது தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தை
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் ஒரு முக்கிய மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகிறது.
ஈரானிடமிருந்து பெறப்பட்ட இந்த முக்கியத் தகவல் பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்படும்.

ஈரானின் இந்தப் பதில் அமைதிப் பேச்சுவார்த்தையில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை ஏற்படுத்துமா அல்லது கூடுதல் நிபந்தனைகளை உள்ளடக்கியிருக்குமா என்பது குறித்து சர்வதேச சமூகத்தினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றனர்.
ஈரானின் இந்த முடிவானது பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri