அமைதி பேச்சுவார்த்தை தோல்வி: ஓமான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு - ஈரானின் அதிரடி முடிவு
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்கு அமெரிக்காவின் அதீத மற்றும் நியாயமற்ற கோரிக்கைகளே காரணம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்ட அவர், அங்குள்ள உள்ளூர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சென்றடைந்த அராக்ச்சி, மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் குறித்து தனது நட்பு நாடான ரஷ்யாவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்! இலங்கையில் பதிவாகியுள்ள நிலவரம் - நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி
அடுத்தகட்ட பேச்சுவார்த்தை
முன்னதாக இஸ்லாமாபாத்தில் மத்தியஸ்தர்களுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர முடியும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஈரானால் தற்போது மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணை குறித்தும் அவர் பேசினார். இந்த முக்கியமான கடல்வழிப் பாதையில் பாதுகாப்பான போக்குவரத்து என்பது உலகளாவிய ரீதியில் முக்கியமான ஒரு விடயம் என்று குறிப்பிட்ட அவர், இதில் ஓமான் உள்ளிட்ட அண்டை நாடுகள் தங்களின் பரஸ்பர நலன்களுக்காக ஈரானுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே இந்த பிரச்சினையில் பொதுவான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும், ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளைத் தொடர முடிவு செய்துள்ளதாகவும் அராக்ச்சி தெரிவித்தார்.