விமானப் பயணங்களுக்காக திறக்கப்பட்ட ஈரானின் வான்வெளிகள்
ஈரானின் மத்திய மற்றும் மேற்குப் வான்வெளி, சர்வதேச விமானப் பயணங்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஈரான் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு உருவானதையடுத்து, ஜூன் 13ஆம் திகதி ஈரான் தனது வான்வெளியை மூடியது.
இரண்டு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற 12 நாட்கள் மோதலையடுத்து, இரு தரப்பிற்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை(24) போர் நிறுத்தம் எட்டப்பட்டது.
மதிப்பீடுகள்
இந்நிலையில், விமானப் பயணத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் மதிப்பீடுகள் நிறைவடைந்ததை அடுத்து, ஈரான் தனது வான்வெளியை திறக்க தீர்மானித்துள்ளது.

முன்னதாக, ஈரானின் கிழக்குப் பகுதி வான்வெளியை உள்நாட்டு, சர்வதேச மற்றும் கடந்து செல்லும் விமானங்களுக்காக ஈரான் திறந்துவிட்ட போதிலும், வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள ஈரானிய விமான நிலையங்களில் இருந்து எந்த விமானமும் தரையிறங்குவதற்கான அல்லது புறப்படுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

குறித்த பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரம் 2 மணி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்று சிறப்பு மிக்க களுதாவளை பிள்ளையாருக்கு எதிராக நடந்த பெரும் சதியில் சிக்கிய முக்கிய புள்ளிகள்!
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam