ஒட்டுமொத்த பிராந்தியமும் தீக்கிரையாகும்! டிரம்பின் மிரட்டலுக்கு ஈரானின் பதிலடி எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த பிராந்தியமும் தீக்கிரையாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது காலிபாப் எச்சரித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாகத் திறக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த கெடு இன்றுடன் முடிகிறது.
இந்த நிலையில் "ஜலசந்தியைத் திறக்காவிட்டால் நரகத்தின் வாசல் திறக்கப்படும்" என்று ஏற்கனவே எச்சரித்திருந்த டிரம்ப், தற்போது ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றைத் தகர்க்கப்போவதாக கூறியுள்ளார்.
பதிலடி
இந்த நிலையில் டிரம்பின் எச்சரிக்கைக்கு வழங்கியுள்ள பதிலடியில் முகமது காலிபாப் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கட்டளைகளுக்கு அடிபணிந்து செயல்படும் டிரம்ப், அமெரிக்க மக்களை நரக வேதனையில் தள்ளுகிறார். போரால் எதையும் சாதிக்க முடியாது.
ஈரானின் உரிமைகளை மதித்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதே ஒரே தீர்வாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மீட்கப்பட்ட விமானி அமெரிக்காவிற்கு அனுப்பிய 3 வார்த்தைச் செய்தி! மலைகளில் 48 மணி நேர போராட்டம் - துல்லியமாக செயற்பட்ட CIA