ஈரான் மற்றும் அமெரிக்கா விவகாரம்! அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் ஒன்று தங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அமெரிக்கா மற்றும் ஈரான் அறிவித்துள்ளன.
அத்துடன் குறித்த அமைதி ஒப்பந்தம் தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
போர்நிறுத்தம் தொடங்க வாய்ப்பு
மேலும், இன்று (06) முதல் போர்நிறுத்தம் தொடங்க வாய்ப்புள்ளது என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமாபாத் ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்த முன்மொழிவு, பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் தயாரிக்கப்பட்டு இரு நாடுகளுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்பட்டால் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தகவல் வௌியாகியுள்ளது.
கப்பல்களுக்கு ஈரானின் அனுமதி
ஈரானும் அமெரிக்காவும் 45 நாள் போர்நிறுத்தத்திற்குத் தயாராகி வருவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் 15 கப்பல்கள் ஈரானின் அனுமதியுடன் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட, இவ் வழியான போக்குவரத்து இன்றும் 90% குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் உயர் வெப்பநிலை எச்சரிக்கை நிலை..! வெளியில் செல்வதில் அவதானம் - மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்