ஈரானுக்கு இறுதி கெடு! வான்வழி தாக்குதலில் சிதறிய குடியிருப்பு கட்டடம் - 13 பேர் பலி
ஈரான் தலைநகர் தெஹ்ரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடம் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயற்கை எரிவாயு விநியோகம் பாதிப்பு
இந்த தாக்குதலை நடத்தியது அமெரிக்காவா அல்லது இஸ்ரேலா என்ற விவரம் தெரியவில்லை என கூறப்படுகின்றது.
தெஹ்ரானில் உள்ள ஷரீஃப் பல்கலைக்கழகத்தை குறிவைத்தும் வான்வழி தாக்குதல் நடைபெற்றுள்ளது.
வான்வழி தாக்குதலால், குடியிருப்பு கட்டடம் சேதம் அடைந்துள்ளதோடு, இயற்கை எரிவாயு விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.
இறுதி கெடு
ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 15 அம்ச திட்டத்தை கடந்த வெளியிட்டு ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும். இருப்பில் உள்ள யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் வழங்க வேண்டும். தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை அவர் விதித்தார்.

இருப்பினும், ஈரான் இராணுவம் இதனை ஏற்காத நிலையில், ஈரானுக்கு இறுதி கெடுவை ட்ரம்ப் விடுத்து எச்சரித்திருந்தார்.
இந்த பின்னணியில், ஈரான் தலைநகர் தெஹ்ரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடம் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் உயர் வெப்பநிலை எச்சரிக்கை நிலை..! நாளை ஏற்படவுள்ள மாற்றம் - மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
YOU MAY LIKE THIS VIDEO
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam