IAEAக்கு எதிராக களமிறங்கும் ஈரான்! அதி முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய மொசாட்
சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஈரானின் ஒத்துழைப்பை இடைநிறுத்துவத்தும் சட்டமூலத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் பரிசீலித்து வருவதாக சபாநாயகர்(ஈரானின் )முகமது பாகர் கலிபாஃப் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, ஈரான் - ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தொழில்முறையற்ற மற்றும் அரசியல்மயமாக்கப்பட்ட நடத்தை என்று கருதுவதற்கு பதிலளிக்கும் வகையில் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக IAEA அதன் உறுதிமொழிகளை நிலைநிறுத்தத் தவறிவிட்டது என்றும், மற்றும் ஒரு அரசியல் கருவியாக IAEA மாறிவிட்டது என்பதை உலகம் தெளிவாகக் கண்டுள்ளது எனவும் காலிபாஃப் குற்றம் சுமத்தியுள்ளார்.
இடைநிறுத்தப்படும் ஒத்துழைப்பு
இது தொடர்பிலான நடுநிலைக்கு ஈரான் உறுதியான உத்தரவாதங்களை பெறாவிட்டால், அந்த நிறுவனத்துடனான ஒத்துழைப்பு இடைநிறுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திட்ட நாடாக, அமைதியான நோக்கங்களுக்காக யுரேனியத்தை செறிவூட்ட ஈரானுக்கு உரிமை உண்டு எனவும் கலிபாஃப் விளக்கமளித்துள்ளார்.
மேலும், ட்ரம்ப் இந்த ஆக்கிரமிப்புச் செயலுக்கு வருத்தப்படும் வகையில் நாங்கள் நிச்சயமாக பதிலடி கொடுப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தூண்டுதலற்ற தாக்குதல்கள் மற்றும் நடான்ஸ், ஃபோர்டோவ் மற்றும் இஸ்பஹானில் உள்ள ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது சமீபத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரகசிய கடிதங்கள்
இந்நிலையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை அதன் அணுசக்தி திட்டத்திற்காக யுரேனியத்தை செறிவூட்டுவதை கைவிடுமாறு கூறிவருகின்றன.
குறிப்பாக முக்கியமான தகவல்களைக் கொண்ட IAEAவுக்கு அனுப்பப்பட்ட ஈரானின் அதிகாரப்பூர்வ மற்றும் இரகசிய கடிதங்கள், இரகசிய வழிகள் மூலம் இஸ்ரேலின் மொசாட் அமைப்புக்கு அனுப்பப்பட்டதாக ஈரான் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
IAEA தகவல்களை கசியவிட்டதால் , பல உயர்மட்ட ஈரானிய அணு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டனர் என்றும் ஈரான் கூறியுள்ளது.
you may like this





கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri
