இஸ்ரேல் மீது பல்முனைத் தாக்குதல்! ஈரானின் புதிய திட்டம் அம்பலம்
இஸ்ரேலிய உளவுத்துறை மதிப்பீடுகளின்படி, ஈரான் தனது பிராந்திய ஆதரவு அமைப்புகளுடன் இணைந்து ஒக்டோபர் 7 தாக்குதலைப் போன்ற ஒருங்கிணைந்த பல்முனைத் தாக்குதலொன்றை இஸ்ரேல் மீது நடத்துவதற்கான திட்டத்தை வகுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக லெபனானின் ஹிஸ்புல்லா, யேமனின் ஹூதிகள், ஹமாஸ் மற்றும் ஈராக், சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை ஒரே நேரத்தில் களமிறக்க ஈரான் திட்டமிட்டு வருவதாக Jerusalem Post செய்தி வெளியிட்டுள்ளது.
பல்முனைத் தாக்குதல்
ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு முன்னர் ஈரானுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் தாக்குதல் குறித்த முழுமையான தகவல்கள் அல்லது அதன் திகதி தெரிவிக்கப்படாததால், அன்றைய தாக்குதல் பல்முனைத் தாக்குதலாக மாறவில்லை.

ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், ஹமாஸின் ஆரம்பகட்ட வெற்றி ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவை முழுமையான பிராந்தியப் போரில் இணைக்கும் என எதிர்பார்த்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அப்போது ஏற்பட்ட ஒருங்கிணைப்புக் குறைபாடுகளை சரிசெய்து, ஹிஸ்புல்லா, ஹூதிகள் மற்றும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் முதல் நாளிலேயே ஒரே நேரத்தில் தாக்குதல்களை ஆரம்பிக்கும் வகையிலான திட்டத்தை ஈரான் உருவாக்கி வருவதாக இஸ்ரேலிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்
மேலும், ஈரானின் உதவியுடன் ஹமாஸ்–ஹிஸ்புல்லா ஒருங்கிணைப்பு மீண்டும் அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) குத்ஸ் படை அதிகாரிகள், ஹிஸ்புல்லா, ஹூதிகள் மற்றும் ஈராக் ஆயுதக் குழுக்களின் தளபதிகளுடன் காணொளி மாநாடுகள் மற்றும் நேரடி சந்திப்புகள் மூலம் கலந்துரையாடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், முந்தைய மோதல்களில் சேதமடைந்த இராணுவ திறன்களை மீளக் கட்டியெழுப்ப ஈரான் முயற்சித்து வருவதுடன், கூட்டு பயிற்சிகள் மற்றும் செயற்பாட்டு ரீதியான தொடர்புகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ‘எதிர்ப்பின் அச்சு’ என அழைக்கப்படும் ஈரான் ஆதரவு குழுக்களுக்கு இடையிலான ஒட்டுமொத்த இராணுவ ஒருங்கிணைப்பு மேலும் வலுப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri