ஈரானை கதிகலங்க வைத்த மொசாட்டின் பதிவு.. கசிந்த முக்கிய இரகசிய தகவல்!
ஈரான், தனது புதிய இராணுவத் தளபதி தொடர்பான தகவல்களை வெளியிட மறுத்துள்ள நிலையில் இஸ்ரேலிய உளவுத்துறை அதனை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட்டின் எக்ஸ் தள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பதிவில், "ஈரானின் புதிய தளபதியின் பெயரை இஸ்லாமிய குடியரசு ஆட்சி வெளியிடாது என்று அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய தளபதி
அவரது பெயர் என்னவென்று எங்களுக்குத் தெரியும், அவரை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
துரதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற அடிப்படை தகவல்கள் ஈரான் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன. அவரது பெயர் பற்றிய உங்கள் யூகங்களை எங்களுக்கு அனுப்புங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
12 நாட்கள் கடுமையான மோதலுக்கு பிறகு இஸ்ரேல் - ஈரான் இடையே அமெரிக்க தலையீட்டால் போர்நிறுத்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, இரு நாடுகளிலும் நடந்த பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்பட்ட அதேவேளை, ஈரானின் முக்கிய தளபதிகள் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
خبرگزاری تسنیم اعلام کرد که رژیم جمهوری اسلامی نام فرمانده جدید خاتم الانبیاء را برای محافظت از او منتشر نخواهد کرد.
— Mossad Farsi (@MossadSpokesman) July 1, 2025
بدانید که ما دقیقاً می دانیم نام او چیست واو را به خوبی میشناسیم.
متأسّفانه چنین اطلاعات اساسی از مردم ایران پنهان میشود.
لطفا حدس های خود را در مورد نام او…
அதன்பின்னர், ஈரானின் இராணுவ படைக்கு புதிய தளபதியை நியமித்துள்ளதாக ஈரான் அறிவித்ததுடன் அவர் தொடர்பான தகவல்களை வெளியிடாத நிலையில் தற்போது மொசாட் அதனை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |