இஸ்ரேலில் கொத்துக் கொத்தாக வெடித்துச் சிதறும் ஈரானின் ஏவுகணைகள்
ஈரான்-இஸ்ரேல் தாக்குதலில் இஸ்ரேல்(Israel) போரியலில் புதிய முறையை கையாளுகின்றது என கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“ஈரான்-இஸ்ரேல் தாக்குதலானது மட்டுப்படுத்தப்பட்ட காலத்தை தாண்டியும் தற்போதுவரை தொடர்வதால் இதன் தீவிரம் அதிகரித்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து போர் அச்சம் காரணமாக மக்கள் புறநகர் பகுதிகளை நோக்கி நகரத்தொடங்கியுள்ளார்கள்.
இருநாடுகளிடைக்கிடையில் தொடரும் தாக்குதலில் இஸ்ரேலில் ஈரானின் ஏவுகணைகள் வெடித்து சிதறுகின்றன.
மேலும், தாக்குதல்களில் உயிரிழப்போர் தொடர்பில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையாக உள்ளன” என குறிப்பிட்டார்.
ஈரான்-இஸ்ரேல் தாக்குதல் தொடர்பில் இன்றுவரை இடம்பெற்ற விடயங்களை அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
