ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்தது போன்ற நிலையை அனுபவிக்கும் இஸ்ரேல்! சிறீதரன் எம்.பி
சர்வதேச போர் விதிமுறைகளை மீறி எவ்வாறு தமிழர்கள் மீது இலங்கை அரசு கொத்துக் குண்டுகளை வீசி மிக மோசமான போர் நடவடிக்கைகளை செய்துள்ளதோ அதே போன்று ஈரான் தற்போது இஸ்ரேல் மீது கொத்துக் குண்டுகளை வீசியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வான்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அழிக்கப்பட்ட தமிழர்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது பல நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. ஈரான் இஸ்ரேல் மீதான தாக்குதல் என்பது உலகத்திலும் ஏன் எங்களுடைய நாட்டின் பொருளாதாரத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. நாங்கள் சிறிய அளவிலே முன்னேறுகின்ற போதெல்லாம் உலகத்தில் ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடிகள் எங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி எங்களையும் பின் தள்ளுகின்றது.
எங்கள் மீது இலங்கை அரசு கொத்துக் குண்டுகளை வீசி யுத்தம் புரிந்து எங்களை அழித்தார்கள். யுத்தம் முடிந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கொத்துக் குண்டுகளின் சிதைவுகளையும் எச்சங்களையும் புகைப்படங்களாகவும் வீடியோ ஆவணங்களாகவும் வெளியிலே கொண்டுவரப்பட்டன.

அதனை பல தடவை நாடாளுமன்றத்திலும் நான் பேசியிருக்கின்றேன். சர்வதேச போர் விதிகளை மீறி தமிழர்கள் மீது இலங்கை அரசு மிக மோசமான போரியல் நடவடிக்கைகளை செய்தது என்பதற்கான ஆதாரங்கள் காணப்பட்டன.
அதேப்போன்று கொத்துக்குண்டுகளை இப்போது ஈரான் இஸ்ரேல் மீது வீசி இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.
சர்வதேச போர் விதிகளை தாண்டியும் போர் முறைகளை தாண்டியும் அப்பாவிகளாக இருந்த தமிழ் மக்கள் மீது இருபத்திரெண்டு நாடுகள் சேர்ந்து இவ்வாறு இதே கொத்துக் குண்டுகளை வீசி போரியல் வல்லமையிலே ஒரு சிறிய இனக்குழுமமாக இருந்த எங்கள் மீது குண்டுகளை வீசி நாங்கள் அழிக்கப்பட்டோம்.
ஒருவேளை ஈரானிலே மனித குலத்துக்கு எதிராக நடக்கின்ற யுத்தத்திற்கு நாங்கள் ஆதரவானர்கள் என்ற செய்தியை சொல்லக்கூடும். நாங்கள் அழிக்கப்படும் போது யாரும் எங்களுக்காக யாரும் குரல் தரவில்லை. ஐக்கிய நாடுகள் சபையிலே 2009ம் தமிழ் மக்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதை தீர்மானமாக கொண்டு வந்த போது ஈரான் நாடு ஒருபோதும் எங்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை. அதனை எதிர்த்தே வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அருகே ஈரான் கப்பல் தாக்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்க படைகளால் இரட்டை எச்சரிக்கைகள்! வெளியான அதிர்ச்சி தகவல்