ஹார்முஸ் நீரிணை பகுதியில் உச்சக்கட்ட பதற்றம்! வெடித்து சிதறிய ஈரானின் போர்க்கப்பல்கள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதலில் ஈரானின் 44 போர்க்கப்பல்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடலில் கண்ணிவெடிகளை பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை தாக்கி அழித்ததாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.
நவீன ரக கண்ணி வெடிகள்
ஹோர்முஸ் நீரிணை அருகே 16 கண்ணிவெடி பதிக்கும் கப்பல்கள் உட்பட பல ஈரான் கடற்படை கப்பல்களை தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவ மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே "ஈரான் இதுவரை இல்லாத அளவில் கண்ணிவெடிகளை ஹார்முஸ் நீரிணையில் வைத்திருக்கிறது. இது தவிர ஈரானிடம் 2000-6000 வரை நவீன ரக கண்ணி வெடிகள் இருக்கலாம் எனவும் எச்சரித்திருந்தது.
மசகு எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் நடைபெறும் ஹோர்முஸ் நீரிணை கடல் பகுதியில் ஈரான் கண்ணிவெடிகளை வைத்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், தவறினால் முன்பு கண்டிராத அளவில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையில் 16 கண்ணிவெடி படகுகள் அழிக்கப்பட்டுள்ளன.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 6 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam