பாகிஸ்தான் கொடுத்த அதிர்ச்சி - மொஜ்தபா கமேனியின் இராணுவ முடிவுகளால் கதி கலங்கும் இஸ்ரேல்
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் தற்போதும் மத்தியகிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் நாடு ஒருபோதும் போரைத் தேடிச் செல்லவில்லை, தற்போதும் போரை விரும்பவில்லை ஆனால் தனது தேசத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதில் இருந்து பின்வாங்காது என்று மொஜ்தபா கமேனி நேற்றைதினம்(9) குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இஸ்ரேல் இப்பிராந்தியத்தின் ஒரு புற்றுநோய் என்றும், தீய இஸ்ரேல் மனிதகுலத்திற்கே ஒரு சாபம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் குறிப்பிட்டுள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது அதன் மத்தியஸ்தர் அத்தகைய அறிக்கையை வெளியிட்டதை இஸ்ரேல் கடுமையாக எதிர்த்துள்ளது.
யூத அரசு ஒரு புற்றுநோய் என்ற யூத விரோதக் கூற்று, அது முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.
இந்த விடயங்கள் தொடர்பில் எடுத்து வருகின்றது லங்காசிறியின் கழுகுபார்வை நிகழ்ச்சி...