ஈரான் - இஸ்ரேல் யுத்த நிலவரம்! அமெரிக்காவின் புதிய எச்சரிக்கை
இஸ்ரேல் - ஈரானுக்கு இடையில் மூண்டுள்ள போரில் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களின் அச்சுறுத்தல் குறைந்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க குடிமக்களை தொடர்ந்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
எச்சரிக்கை இன்றி நடத்தப்படும் தாக்குதல்கள்
தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வை அதிகரித்துக் கொள்ளுமாறும் தூதரகம் நினைவூட்டியுள்ளது.
ஏனெனில் தாக்குதல் சம்பவங்கள் பெரும்பாலும் எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்களின்றி நடைபெறுகின்றன என தூதரகம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
அரசியல் சூழ்நிலை மற்றும் சமீபத்திய சம்பவங்களை பொறுத்து பாதுகாப்பு சூழல் விரைவாக மாறலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க அரசாங்க ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான தங்குமிடம் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டுள்ளது.
மிக தீவிரமான நிலை! எல்லையை நோக்கிப் பாய்ந்த நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் : ஈரானின் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |