ஆபத்தாகும் அடுத்து வரும் 24 மணித்தியாலங்கள்! ஈரான் இராணுவத்தின் பகிரங்க மிரட்டல்
இஸ்ரேல் இதுவரை 400 ஏவுகணைகளை ஈரான் மீது ஏவியுள்ளது என்பதும் அழிவுகள் பற்றியுமே வெளியில் காட்டப்படுகின்றதே தவிர இராணுவம் சார்ந்த எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை என்று கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“ஈரானிலிருந்து ஏவப்படுகின்ற ஏவுகணைகள் இஸ்ரேல் உருவாக்கியிருக்கும் பாதுகாப்பு வலயத்தை கடந்து விழுந்து வெடிக்கின்றன.
தங்களுடைய இராணுவ தளங்களின் மீதும் வெடித்து சிதறியுள்ளதை ஒத்துக்கொண்ட இஸ்ரேல் அதனை பற்றிய வேறு எந்த தகவலையும் வெளியிட மறுக்கின்றது.
அதனை தெரிந்துக்கொண்ட ஊடகவியலாளர்களுக்கும் குறித்த விடயங்களை வெளியிட மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து பல அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஈரான் 22 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 3ஆவது மாவட்டத்திலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ஈரான் மக்களுக்கு அறிவித்துள்ளது.
இதேபோல் இஸ்ரேல் ஹைபாவிலுள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது’’ என்றார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
