ஈரான் - இஸ்ரேல் மோதல்: மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் எச்சரிக்கை
ஈரான், இஸ்ரேல் மோதல்கள், பொதுமக்கள் மீது கடுமையான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர். வோல்கர் டர்க் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பரந்த பிராந்திய மோதலைத் தூண்டும் அபாயத்தை இது ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீவிர வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் இராணுவ இலக்குகளுக்கு அப்பால் சென்றுள்ளன.
பரவலான சேதங்கள்
இதன் விளைவாக பொதுமக்கள் உயிரிழப்புகள் மற்றும் மருத்துவ வசதிகள், குடியிருப்பு கட்டிடங்கள், நீர் குழாய்கள் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு வசதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் உள்கட்டமைப்புகளுக்கு பரவலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக டர்க் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் 224 இறப்புகள் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய தரப்பில் குறைந்தது 24 இறப்புகள் மற்றும் 840 க்கும் மேற்பட்ட காயங்கள் பதிவாகியுள்ளன.
இந்தநிலையில் இருதரப்பு தலைவர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் எரிச்சலூட்டும் பேச்சுக்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அனைத்து தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், சர்வதேச சட்டத்தை முழுமையாக மதிக்கவும், நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்; வோல்கர் டர்க் அழைப்பு விடுத்துள்ளார்.





ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் நேரம் திடீர் மாற்றமா?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
